எபிரெயர், இரண்டாம் அதிகாரம் #2 57-0825E 1. பவுல் முதலில் வந்து, வேதவாக்கியங்களை ஆய்ந்துபடித்தபடியால், அது சத்தியமா அல்லது இல்லையா என்பதைக் காணும்படி அவனால் அதை ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. அவன் அதை சத்தியம் என்று பழைய ஏற்பாட்டின் மூலம் ஏற்றுக்கொண்டான். இப்பொழுது, பவுல் பழைய ஏற்பாட்டின் வேதபண்டிதனாயிருந்தான். எத்தனை பேர் அதை அறிவீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.-ஆசி.] அவன் தன்னுடைய நாளின் மிகச் சிறந்த வேத பண்டிதர்களில் ஒருவரான முதன்மையான வேதபண்டிதனான கமாலியேலின் கீழ் கற்பிக்கப்பட்டான். பவுல் பழைய ஏற்பாட்டை அறிந்திருந்தான். நான் இந்தக் காலையில் கூறினதுபோல, ஸ்தேவானுடைய மரணத்திற்கு அவன் சாட்சி கூறினபோது, அவனுக்கு உண்டான முதல் நடுக்கத்தைக் குறித்து நான் எண்ணிப்பார்க்கிறேன். அப்பொழுது ஏதோ ஒன்று பவுலைப் பற்றிப் பிடித்திருக்க வேண்டும், ஏனென்றால் அவனுடைய எல்லா நிருபங்களினூடாகவும் அவன் தொடர்ந்து, “தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் பாத்திரவான் அல்ல. நான் அவர்களெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்” என்று தொடர்ந்து குறிப்பிட்டுக் கூறிக்கொண்டே வந்தான். 95 ஓ, ஆனால் தேவன் அதைக் குறித்து ஒரு வித்தியாசமான சிந்தையை உடையவராயிருந்தார். அவன் அந்த நாளின் வல்லமையுள்ள மனிதர்களில் ஒருவனாயிருந்தான். பரிசுத்த பவுலை, மகத்தான் அப்போஸ்தலனைப் பாருங்கள், அவனுடைய வஸ்திரம் மிகவும் பிரகாசமாயும், அழகாயும் உள்ளது, (புலவன் கூறினான்) நாம் எல்லோரும் அங்கே சந்திக்கும்போது, ஓ, நிச்சயமாகவே ஒரு ஆரவாரமிடுதல் உண்டாகும். அந்த மகத்தான நாளில் அவர் ஒரு இரத்த சாட்சியினுடைய கிரீடத்தை, இரத்த சாட்சியினுடைய பலனை பெறுவதை நான் காண்பேனே! 96 அண்மையில் அவர் இந்த நிருபங்களை எழுதின அந்த சிறு பழைய அறையின் அருகில் நான் நின்றேன். அப்பொழுது அவர்கள் அவனுடையத் தலையைத் துண்டித்துப் போட்டனர். பின்னர் அவனைக் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லும்படியாக தூக்கி அதற்குள் தூக்கியெறிந்தனர். அங்கிருந்த இந்தச் சிறு உருவங்கொண்ட யூதன், “இயேசு கிறிஸ்துவின் அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன். நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடியிருக்கிறேன். ஆனால் நான் நல்ல போரட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்கு தந்தருளுவார் எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்” என்று கூறினான். நான் அதை எப்படியாய் விரும்புகிறேன். ஓ நான் அவர்களோடு எண்ணப்பட விரும்புகிறேன். நாம் வழக்கமாக ஒரு பாடலைப் பாடுவோம். ஓ, நீங்கள் அவருடைய மந்தையில் ஒருவராக எண்ணப்பட விரும்புகிறீர்களா? நீங்கள் அவருடைய மந்தையில் ஒருவராக எண்ணப்பட விரும்புகிறீர்களா? கரைதிறையற்றவர்களாய், விழித்திருந்து அவர் மீண்டும் வரும் காட்சியைக் காண காத்திருப்பீர். 97 நான் அவர்களில் ஒருவனாயிருக்க விரும்புகிறேன். இப்பொழுது எழுத்தாளர் தொடர்ந்து இவ்வாறு கூறிச் செல்கிறார்: ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும். 98 நாம் அதன் பேரில் போதித்தபோது, இந்தக் காலையில் 2-வது வசனம் இவ்வாறு கூறுகிறது, “ஏனெனில்…” ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு… 99 தூதர்கள் என்னவாயிருந்திருக்க வேண்டும் என்று நாம் கண்டறிகிறோம்? தீர்க்கதரிசிகள். “பூர்வகாலங்களில்…திருவுளம்பற்றின தேவன்…” இப்பொழுது நம்முடைய சொந்த எண்ணத்தையல்ல, ஆனால் வேதம் கூறுவதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்பொழுது 1-வது அதிகாரத்திலிருந்து…1-வது அதிகாரம், முதலாம் வசனம். பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன். 100 இப்பொழுது அவர் இங்கே கடந்து சென்று, மீண்டும் அதைக் கூறுகிறார். ஏனெனில் தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு… தூதன் என்பது எதைக் குறிக்கிறது? “செய்தியாளனையே”. தேவன் செய்தியாளனை அபிஷேகித்திருப்பாரேயானால்,…அப்படியானால் நாம் அபிஷேகிக்கப்படுவோமேயானால், நாம் தேவனுடைய செய்தியாளர்களாயிருக்கிறோம். நாம் உலகத்திற்கு செய்தியாளர்களாயிருந்து, பரலோகத்தின் தூதுவராயிருந்து, நாம் அந்நியரும், பரதேசிகளும் என்று அறிக்கையிடுகிறோம். நாம் இந்த உலகத்திற்குரியவர்களல்ல. ஆனால் தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்தையே தேடி நாடுகிறோம். நாம் இந்தப் பூமியிலே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும், துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். ஏனென்றால், நம்முடைய பொக்கிஷங்களோ பரலோகத்தில் இருக்கிறது, அங்கே இயேசுவானவர் உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலது பாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறார். ஓ, அதை அறிந்துகொள்வது என்ன ஒரு மகிமையும், ஆச்சரியமுமான காரியமாய் உள்ளது. நம்முடைய நம்பிக்கைகள் இயேசுவின் இரத்தத்திலும், நீதியிலுமேயன்றி வேறொன்றின் மேலும் கட்டப்படவில்லை; என் ஆத்துமாவை சுற்றிலுமுள்ள யாவும் கைவிடும் போது, அவரே என் முழு நம்பிக்கையும், உறைவிடமுமாயிருப்பார். கிறிஸ்து என்னும் திடமான பாறையில் மேல் நான் நிற்கிறேன்; மற்றெல்லா நிலங்களும் அழிந்துகொண்டிருக்கும் மணலே, மற்றெல்லா நிலங்களும் அழிந்துகொண்டிருக்கும் மணலே. 101 எப்படியாய் எடி புரூட் துன்ப வேளைகளில் அந்தப் பாடலை எழுதினார். …இப்பொழுது, தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்படியாமைக்கு நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிபடுத்தப்பட்டிருக்க, (தேவனுடைய செய்தியாளர் பேசினபோது, அது உறுதிபடுத்தப்பட்டது)… நாம் கிறிஸ்துவிற்கு செவிகொடுக்கவில்லையென்றால், பரலோகத்திலிருந்து பேசுகிறவருக்கு நாம் செவிகொடுக்கவில்லையென்றால், நாம் எப்படி தப்பித்துக் கொள்வோம்? இப்பொழுது கவனியுங்கள். …முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு… (அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்)…இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வோம்? 102 கிறிஸ்து தம்முடையக் கிரியையைத் துவங்குகிறார். அவர் என்ன செய்தார்? அவர் எப்படி…தாழ்மையாய், தாழ்மையாயிருந்தார் என்பதையும், அவர் ஒரு வேத பண்டிதனைப் போன்று ஒரு குறிப்பிடத்தக்க மகத்தான மனிதனாயிருக்கவில்லை என்பதையும் நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். ஆனால் அவர் தாழ்மையாயும், சாந்தமாயும், கனிவாயுமிருந்தார். அவர் மிகத் திறமையான சொல்வன்மைமிக்க ஒரு பிரசங்கியாயிருக்கவில்லை. அவருடைய சத்தம் வீதியில் கேட்கப்படவுமில்லை. ஆனால் யோவான் ஒரு கெர்ஜிக்கிற சிங்கமாகப் புறப்பட்டுச் சென்றான். அவன் ஒரு பிரசங்கியாயிருந்தான். 103 இயேசு ஒரு கெர்ஜிக்கிற சிங்கமாக வரவில்லை, ஆனால் தேவன் அவரோடு கிரியை செய்து, வார்த்தையை உறுதிபடுத்தினார். தேவன் கிறிஸ்துவோடு இருந்தார். பேதுரு பெந்தேகோஸ்தே நாளிலே, “இஸ்ரவேலரே, யூதேயாவில் வாசம் பண்ணுகிறவர்களே,…நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். நீங்கள் எல்லோரும் சாட்சிகளாயிருக்கிறீர்கள்” என்று கூறினான். அவன் எப்படியாய் அதை அவர்களுக்கு பதியச் செய்தான் என்பதைக் கவனியுங்கள். “நீங்கள் அவரை அறிந்திருக்க வேண்டும்” என்றான். 104 இயேசு, “மாயக்காரரே, நீங்கள் வெளியெ போய் சூரியனை நோக்கிப் பார்த்து…அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது. அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள்” என்றார். மேலும், “வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? நீங்கள் என்னை அறிந்திருந்தால், நீங்கள் என் நாளையும் அறிந்திருப்பீர்கள்” என்றார். 105 ஓ, இன்றிரவு அவர் என்னவென்று கூக்குரலிடுவார். எப்படியாய் அவருடைய ஆவி அவருடைய பிரசங்கிமார்களினூடாக “வேளை சமீபித்துவிட்டது” என்று கூக்குரலிடுகிறது. நாம் நிதானிக்கிறோம். நாம் அணுகுண்டுகளைக் கவனிக்கிறோம். கிளார்க் காப்ளஸ் என்பவருடைய இடத்தை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்பதையும், யார் இதை, அதை அல்லது மற்றதை அல்லது யார் துணை குடியரசுத்தலைவர் என்பதையும் நாம் அறிவோம். நாம் அதில் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆனால் காலங்களின் அடையாளங்களை நிதானிக்க நம்மால் முடியவில்லை. நாம் முடிவில் இருக்கிறோம். 106 அது என்ன? நாம், “தொலைக்காட்சியின் அடுத்தக் காட்சி என்ன என்பதிலும், ஒலிப்பரப்பாகும் அந்த நிகழ்ச்சியில் சூசி என்ன செய்யப்போகிறாள் என்பதிலுமே” அதிக ஆர்வங்கொண்டுள்ளோம். இல்லையென்றால் அந்த ஸ்திரீயினுடைய பெயர் என்ன? “அங்கே ஆர்த்தர் காட் ஃபிரே அந்த நிகழ்ச்சியில் என்ன செய்யப் போகிறார் என்பதிலும், அவர் அடுத்த முறை என்ன விதமான ஒரு கேலிப் பேச்சை பேசி மகிழ்விக்கப்போகிறார் என்பதிலுமே மிகுந்த ஆர்வங்கொண்டுள்ளோம். கிறிஸ்தவர்களாயிருக்கின்ற நம்முடைய சிந்தைகள் அப்பேர்ப்பட்ட அர்த்தமற்ற காரியங்களால் முழுமையாக அழுக்கடைந்துள்ளன. எனவே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற காலத்தின் அடையாளங்களை அறிந்து கொள்ள நாம் எங்காவது ஜெபத்திலும், வேதத்தை ஆராய்ந்து படிப்பதிலும் தரித்திருக்க வேண்டும். 107 நம்முடைய காலத்தில் உள்ள பெலவீனமான பிரசங்க பீடங்கள் என்ன செய்கிறதென்றால், அது சரியான சுவிசேஷ சத்தியத்தை கொண்டு வருகிறதில்லை. நாம் அதற்காக வரப் போகின்ற நாட்களில் பதில் கூற வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் எந்தக் காரியத்தையும் அலட்சியம் செய்யக் கூடாது. ஜனங்களே, நாம் இங்கே இந்த பிரான்ஹாம் கூடாரத்திலே அடையாளங்களையும், அதிசயங்களையும், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் வல்லமையையும் காணும்படியாக இருக்கின்றபடியால், நாம் நம்முடைய நேரங்களை மற்ற காரியங்கள் பேரில் செலவழித்துவிட்டு, கர்த்தராகிய இயேசுவின் சத்தத்தைக் கேட்க அலட்சியமாயிருந்தால், “நாம் இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வோம்?” 108 3-வது வசனம், இல்லை 4-வது வசனம், இங்கே நாம் இந்தக் காலையில் 4வது வசனத்தில் முடித்தோம். …தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற…(ஓ, என்னே!) …தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற… வார்த்தையைக் கவனியுங்கள். …அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பல விதமான பலத்த செய்கைகளினாலும்… பலவிதமான பலத்த செய்கைகள் என்றால் என்ன? பலவிதம் என்றால் என்ன? பலவிதம் என்பது “அநேகம்” என்று பொருள்படுகிறது. “அநேக அற்புதங்களினால் தேவன் சாட்சி கொடுத்தார்.” ஓ தேவனே! அது உங்களுடைய இருதயங்களுக்குள்ளாக பதியும் என்று நான் நம்புகிறேன். கவனியுங்கள். 109 நான் உங்களுடைய போதகர்களில் ஒருவனாக, சகோதரன் நெவில் அவர்களோடு இங்கிருக்கிறேன். நீங்கள் இதைப் பதிவு செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வேதம், “உங்களுக்குள்ளே ஒருவன் எழும்பி, அவர் கூறுகிற இன்ன-இன்ன காரியம் நிறைவேறாமற் போனால், அப்பொழுது அவன் கூறினதற்கு செவிகொடுக்க வேண்டாம், ஏனென்றால் நான் அதை உரைக்கவில்லை. ஆனால் அவன் என் நாமத்தில் பேசி, அவன் கூறுகிறது நிறைவேறுமேயானால், அப்பொழுது அதற்கு செவிகொடுங்கள்.” என்று உரைத்துள்ளது. ஆமென். “ஏனென்றால் நான் அந்தத் தீர்க்கதரிசியோடு அல்லது அந்தப் பிரசங்கியோடு இருக்கிறேன். அது என்னவாயிருந்தாலும் சரி, அவர் கூறுகிறது நிறைவேறுமேயானால், அப்பொழுது அவனுக்கு செவிகொடுங்கள்.” 110 இப்பொழுது நண்பர்களே, நாம் அவருக்கு செவி கொடுப்போமாக. நம் மத்தியில் பேசிக்கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியானவர் பலவிதமான அற்புதங்களையும், அடையாளங்களையும், அதிசயங்களையும் காண்பித்துக் கொண்டிருக்கிறார். அதை சாதாரண காரியங்களைப் போல நாம் கடந்து சென்றுவிடாமலிருப்போமாக. இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்றும், அவர் தம்முடைய வார்த்தையை உறுதிபடுத்துகிறார் என்பதையும் நினைவில் கொள்வோமாக. நாம் அதைச் செய்ய வேண்டும். ஓ, தயவுகூர்ந்து அதைச் செய்யுங்கள். செவிகொடுங்கள். மற்ற ஒவ்வொரு காரியமும், உங்களுடைய வீடு, உங்களுடைய கணவன், உங்களுடைய மனைவி, உங்களுடைய பிள்ளைகளும் கூட இரண்டாவது காரியமாயிருக்கட்டும். அது என்னவாயிருந்தாலும் அதை இரண்டாவது இடத்தில் வையுங்கள். தேவனை முதலில் வையுங்கள். நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், என் பிள்ளைகளுமா?” என்று கேட்கலாம். எல்லாக் காரியத்தையுமே. தேவனை முதலில் வையுங்கள். அவரே முதன்மையாயிருக்கட்டும். 111 எலியா ஒருநாள் மலையிலிருந்து இறங்கி வந்தான். அவர் ஒரு தூதனாய், ஒரு செய்தியாளனாய், அபிஷேகிக்கப்பட்ட தேவனுடைய செய்தியாளனாயிருந்தான். அப்பொழுது அவன் இரண்டு விறகுகளை பொறுக்கிக் கொண்டிருந்த ஒரு விதவையான ஸ்திரீயைக் கண்டான். அப்பொழுது அவன், “போய் எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி, கொஞ்சம் தண்ணீரும் கொண்டு வா” என்றான். 112 அதற்கு அவள், “பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். எனவே அதை ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன்” என்றாள். பண்டைய மாதிரியான இந்தியரின் முறையானது இரண்டு விறகுகளை ஒன்றுக்கு ஒன்று குறுக்காக வைத்து அதன் மத்தியில் நெருப்புண்டாக்கி, அதை தள்ளிவிட்டுக்கொண்டே எரிப்பதாயிருந்தது. அந்தவிதமாக அநேகர் கூடாரமிட்டுத் தங்கும் முகாம்களில் நெருப்புண்டாக்குவர். மேலும் அவள், “நான் எனக்காகவும், என்னுடைய பையனுக்காகவும், என்னுடைய குழந்தைக்காகவும் அந்த சிறு அடையைச் சுடப் போகிறேன். பின்னர் நாங்கள் அதைச் சாப்பிட்டுவிட்டு, மரிக்கப் போகிறோம்” என்றாள். அங்கே மூன்றரை வருட காலமாக பஞ்சம் உண்டாயிருந்தது. எங்குமே தண்ணீர் இல்லாதிருந்தது. 113 அந்தக் கண்டிப்பான, வயோதிக தீர்க்கதரிசி அந்த ஸ்திரீயின் முகத்தை உற்றுப் பார்த்தான், பின்னர் அவன், “போய், எனக்கு முதலில் ஒர் அடையை உண்டுபண்ணி கொண்டு வா” என்றான். மரணத்திற்கேதுவாய் பட்டினியாயிருக்கிற ஒரு விதவை ஸ்திரீயினிடத்தில் ஒரு மனிதன் தன்னை முதலில் போஷிக்கும்படிக்கு சொல்லும்படியான என்ன ஒரு கட்டளை. அதன்பின்னர், அவன் என்ன கூறினான்? “தேவன் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் பானையின் மாவு செலவழிந்து வெறுமையாகப் போவதும் இல்லை, கலசத்தில் எண்ணெய் குறைந்து காய்ந்து போவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று உரைத்தான். முதலில் தேவன். அவள் உள்ளே சென்று அந்தச் சிறிய அடையைச் சுட்டு, அதைக் கொண்டுவந்து தீர்க்கதரிசிக்குக் கொடுத்தாள். மீண்டும் திரும்பிச் சென்று, மற்றொன்றைச் சுட்டாள், மற்றொன்றைச் சுட்டாள், மற்றொன்றை, மற்றொன்றைச் சுட்டாள். தேவன் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா ஒரு போதும் காலியாக வில்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து காய்ந்து போகவுமில்லை. அவள் தன்னுடையப் பிள்ளைகளுக்கு முன்பாகத் தேவனை வைத்தாள். அவள் எந்த ஒரு காரியத்திற்கும் முன்பாக தேவனை வைத்தாள். அவள் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தை தெரிந்துகொண்டாள். 114 தேவன் உங்களுடைய இருதயத்தில் முதல் இடத்தில், உங்களுடைய ஜீவியத்தின் முதல் இடத்தில், நீங்கள் என்னவாயிருந்தாலும் அல்லது நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திலும் முதல் இடத்தில் இருக்க வேண்டும். தேவன் முதலில் இருக்கவேண்டும். அவர் இரண்டாம் இடத்தில் இருக்க விரும்புகிறதில்லை. அவர் இரண்டாம் இடத்திலிருக்கத் தகுதியானவரல்ல. நாம் பெற்றுள்ள எல்லாவற்றிலும் அவர் மிகச் சிறந்த வகையில் முதன்மை ஸ்தானத்திலிருக்கவே தகுதியுள்ளவராயிருக்கிறார். அவர் அதற்கே தகுதியுள்ளவராயிருக்கிறார். அவருடையப் பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! …அவர் சாட்சி கொடுத்தார், அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும் தேவன் தாமே சாட்சி கொடுத்ததுமாயிருக்கிற… 115 மனுஷர் என்ன கூறுகிறார்கள் என்பதல்ல, சபை என்னக் கூறியுள்ளது என்பதல்ல, ஆனால் தேவனுடைய சித்தம் என்னவாயிருந்தது என்பதே முக்கியமாகும். ஓ, நாம் தேவனுடைய சித்தத்தைத் தேட வேண்டுமேயன்றி, உங்களுடைய அண்டை வீட்டுக்காரருடையத் தயவை அல்ல, உங்களுடையப் பிள்ளைகளின் தயவை அல்ல, உங்களுடையக் கணவனுடைய அல்லது உங்களுடைய மனைவியினுடையத் தயவை அல்ல. ஆனால் தேவனுடைய சித்தத்தைத் தேடுங்கள், அதை முதலில் செய்யுங்கள். அப்பொழுது மற்ற ஒவ்வொரு காரியமும், மனைவியினுடைய விருப்பமும், பிள்ளைகளுடைய விருப்பமும் சரியாக அதற்குள்ளாக அடங்கிவிடும். ஆனால், தேவனை முதலில் வையுங்கள். 116 இப்பொழுது, கவனியுங்கள். …இனிவரும் உலகத்தைக் குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. 117 மற்றபடி, பரலோகத்தில் பணிவிடை செய்கிற மகத்தான தேவதூதர்கள் காபிரியேல், மிகாவேல், எட்டி மற்றும் கோடிக்கணக்கான பரலோகத்தின் தேவதூதர்கள் அல்லது பூமியின் மேலிருந்து வருகிற ஆயிரக்கணக்கான தீர்க்கதரிசிகளில், அவர்கள் எவரிடத்திலுமே, அவர் நாம் பேசுகிற இனிவரும் உலகத்தின்மேல் ஆதிக்கம் செலுத்த அவர்களில் எவரையும் ஒருபோதும் வைக்கவில்லை. எந்த ஒருவரையும் வைக்கவில்லையே! அவர், “ஏசாயா, நீ உலகத்தை ஆதிக்கம் செய்வாய்” என்று ஒருபோதும் கூறவேயில்லை. அவர் உலகத்தை எலியாவிற்கு ஒருபோதும் கீழ்ப்படுத்தவில்லை. அவர் அதை ஒருபோதும் காபிரியேலுக்கோ அல்லது வேறெந்த தேவதூதனுக்கோ அல்லது எந்தப் பணிவிடை ஆவிக்கோ ஒருபோதும் கீழ்படுத்தி வைக்கவில்லை. 118 அவன் என்னக் கூறினான் என்பதைக் கவனியுங்கள், பவுல் இன்னமும் கிறிஸ்துவை மிகைப்படுத்துகிறான், மேற்குறிப்பிட்டது பற்றி நாம் பேசுகிறோம். …ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக:மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? …அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, 119 இப்பொழுது, நீங்கள் அதை வாசிக்க விரும்பினால், அது சங்கீதம் 8:4-6-ல் உள்ளது. தாவீது அதைப் பேசுகிறான். இப்பொழுது அவர் இங்கே தாவீதை என்னவென்று அழைத்தார்? அது சரியாக அங்கே அதனை தீர்த்து வைக்கிறது, இந்தக் காலையில் தீர்க்கதரிசியின் பேரில் அது சரியானதாயிருந்தது. 120 அவர், “தூதர்களில் ஒருவன் ஒரு இடத்தில் கூறினான்” என்றார். தாவீது, தேவனுடைய செய்தியாளனாய், தேவனுடைய தூதனாய் இருந்தான், ஏனென்றால் அவன் தேவனுடைய செய்தியாளனாயிருந்தான். தூதன் கூறினான், தாவீது, “நீர் அவனைத் தேவ தூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்” என்று சங்கீதத்தில் கூறினான். தேவன் அவரை முடிசூட்டும்படிக்கு, அவர் பாடுபட்டு, மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு, மீண்டும் உயர்த்தப்படும்படிக்கு அவரை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினார் என்று தூதன் கூறினான். அதாவது அவர் உலகத்தின் காரியங்கள் எல்லாவற்றையும் சுதந்தரிக்கும்படிக்கு…அவரை அவ்வாறு ஆக்கினார். [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] 121 இப்பொழுது மத்தேயு 28:18-ல் நாம் இவைகளை வாசிக்கிறோம். அவர் சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோடெழுந்த பிறகு, அவர் தம்முடைய சீஷர்களை சந்தித்து, அவர்கள் உலகமெங்கும் போய், ஒவ்வொரு சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி கட்டளையிட்டார். அவர் “வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரங்களும் என்னுடைய கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.” என்றார். அது என்னவாயிருந்தது? மனிதனும் தேவனும் இணைக்கப்பட்டிருந்தனர். லோகாஸ் மாம்சமாகி, கொல்லப்பட்டு, நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக மீண்டும் உயிரோடெழுந்தார், அப்பொழுது அவர் என்றென்றைக்குமாய் அபிஷேகிக்கப்பட்ட இம்மானுவேலாய் இருந்தார். தேவன் விண்வெளிக்கு அப்பாலுள்ள ஒரு சிங்காசனத்திலிருந்து என்றென்றுமாய் ஜீவித்து அரசாள கிறிஸ்து இயேசுவாகிய தம்முடைய குமாரனின் இருதயத்திற்கு தம்முடைய வாசஸ்தலத்தை மாற்றினார். “தேவன் கிறிஸ்துவில் இருந்தார்.” அவரே ஆவியானவரின் முடிவான இளைப்பாறும் ஸ்தலமாக இருந்தார். 122 ஆவியானவர் ஒரு நாள் ஒரு கூடாரத்தில், கூடாரத்தில் தங்கியிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். “சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார்.” “ஆனால் ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.” 123 அப்போஸ்தலருடைய நடபடிகளின் புஸ்தகத்தில், 7-வது அதிகாரத்தில், அவன் பேசிக்கொண்டிருந்தபோது, அவன், “அவர்கள் எல்லோருமே அதை முன் கூட்டியேக் கண்டனர். அவர்கள் அவருக்காக கூடாரத்தைக் கட்டினர், மோசே ஒரு கூடாரத்தைக் கட்டி, அங்கே உள்ளே உடன்படிக்கைப் பெட்டியை வைத்தான். ஏனென்றால் தேவன் கிருபாசனத்தின் மேல் இருந்தார். அவர் அங்கே வாசம்பண்ணவில்லை” என்றான். சரி 124 அப்பொழுது, “எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தம்பண்ணினீர்,” கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம் மரணத்தை ருசிபார்க்கும்படி தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டிருந்தது; ஆனால் அது மகா உன்னதமானவரான கிறிஸ்து; சமாதன பிரபு, ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தர், அண்டசராசரத்திலுள்ள ஒவ்வொரு நட்சத்திரத்தையும் சிருஷ்டித்தவரேயல்லாமல் வேறெல்ல. 125 ஓ, தேவனே! அவர் மனிதனை (வீடற்ற, நம்பிக்கையற்ற மனிதனை) மீட்டு, பரலோகத்தில் அவர்களுக்கு ஒரு வீட்டைக் கொடுக்கும்படி தம்முடைய சிருஷ்டியைக் காட்டிலும் சிறியவரானார். எனவே அவர் பரலோக மகிமைகளை விட்டுவிட்டார். அவர் அழைக்கப்பட்டிருந்த உன்னதமான நாமத்தை விட்டுவிட்டார். அவர் பூமியில் இருந்தபோது, மனிதன் அவருக்கு வழங்கக் கூடிய மிக இழிவான பெயரையே வழங்கினான். “அவரை துவக்கத்திலேயே முறைதவறிப் பிறந்த குழந்தை” என்றழைத்தனர். ஒரு முன்னணையிலே பிறந்தார், காளையின் நுகத்தடியிலே சுற்றப்பட்டிருந்த கந்தை துணியிலே சுற்றி கிடத்தப்பட்டார். போவதற்கு இடமில்லை, போவதற்கு வீடேயில்லாதிருந்தது. பிசாசுகளின் தலைவன், “பெயல்செபூல்” என்று அழைக்கப்பட்டார். அவர் தவறாக நடத்தப்பட்டார். அவர் மேல் துப்பினார்கள். அவர் பரிகசிக்கப்பட்டார். அவர் புறகணிக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களுக்குச் சென்று “மிக இழிவான வேசிகளண்டை” குனிந்து நின்றார். அதைத் தான் மனிதன் அவருக்குச் செய்தான். 126 ஆனால் அவர் வானத்தையே கீழ்நோக்கிப் பார்க்கும்படியான உயரத்திற்கு தேவன் அவரை எழுப்பி உயர்த்தினார். மனிதன் அவருக்கு மிகவும் தாழ்வான இடத்தை அளித்து, மிக மோசமான இடத்தை அவருக்கு அளித்து, மிக இழிவான பெயரை வழங்கினான். தேவன் அவரை எழுப்பி, எல்லாவற்றிலும் மேலான இடத்தை அவருக்கு அளித்து, எல்லாவற்றிற்கும் மேலான நாமத்தை அளித்தார். அதுவே மனிதன் தேவகுமாரனுக்கு என்ன செய்தான் என்பதற்கும், தேவன் தேவ குமாரனுக்கு என்ன செய்தார் என்பதற்குமுள்ள வித்தியாசமாயுள்ளது. 127 நாம் உயர்த்தப்படும்படிக்கு அவர் குனிந்தார். நாம் அவருடைய கிருபையினூடாக அவரைப் போலாகும்படிக்கு அவர் நம்மைப் போலானார். நாம் ஒரு வீட்டை உடையவர்களாயிருக்கும்படிக்கு, அவர் வீடற்ற இடத்திற்கு வந்து, தமக்கு வீடில்லாதவரானார். நாம் குணமடையும்படிக்கு, அவர் சுகவீனரிடத்திற்கு வந்து, தம்மையே சுகவீனமாக்கிக் கொண்டார். அவர் பாவியண்டை வந்து, நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, “தம்மையே பாவமாக்கினார்.” 128 அவர் உயர்த்தப்பட்டார் என்பதில் வியப்பொன்றுமில்லை. அவர் இன்றிரவு யாராயிருக்கிறார் என்பதில் வியப்பொன்றுமில்லையே. தேவன் அவரை உயர்த்தி, வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரத்தையும் அவருக்கு கொடுத்திருக்கிறார். 129 இங்கே பூமியின் மேல்…அவருடைய பூமிக்குரிய ஊழியம் முடிவடைந்திருந்த போது…அவர் பூமிக்கு வந்து, அவர் அதை செய்து முடித்தவுடன், அவர் தேவகுமாரன் என்று விடிவெள்ளி நட்சத்திரம் அறிவித்தது. அவரிடத்தில் தொடர்புகொண்ட ஒவ்வொரு பிசாசையும் அவர் அதிரச் செய்தார். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! பிசாசுகள் நடுங்கி, ஆட்டங் கண்டு, அவருடைய பிரசன்னத்தில் இரக்கத்திற்காகக் கெஞ்சின. ஆம் ஐயா, முழு நரகமும் அவர் யாராயிருந்தார் என்பதை அறிந்து கொண்டது. 130 தாழ்மையாய் நடந்தார், மழை பெய்து கொண்டிருந்த இரவு நேரங்களிலோ அவருடைய தலையை சாய்க்க அவருக்கு இடமில்லாதிருந்தது. அவர் சிருஷ்டித்த மிருக ஜீவன்களுக்கு இடம் இருந்தது, “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மனுஷ குமாரனுக்கோ அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட தலையைச் சாய்க்க இடமில்லை.” நிச்சயமாகவே, அவர் இடமில்லாமலிருந்தார். 131 அவர் பாவமானார், அவர் இழிவாக்கப்பட்டு கைவிடப்பட்டார். அவர் யாராயிருந்தார் என்பதை பிசாசுகள் அறிந்திருந்தன. எனவே அவைகள் இரக்கத்திற்காக மன்றாடின. அவைகள், “எங்களுடைய காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த நீர் ஏன் வந்தீர்?” என்று கேட்டன. பிரசங்கிமார்கள் அவரை, “பெயல்செபூல்”, குறிசொல்பவர் என்று அழைத்துக் கொண்டிருக்க, பிசாசுகளோ, அவரை, “ஜீவனுள்ள தேவனுடைய குமாரனே” என்று கூப்பிட்டு, இரக்கத்திற்காக கெஞ்சிக் கொண்டிருந்தன. 132 ஓ, எப்படியும் நம்மால் ஒரு நிமிடம் மாத்திரம் அப்படியே நிறுத்தக் கூடுமானால் நலமாயிருக்குமே! எப்படியாயினும் நீங்கள் யாராயிருக்கிறீர்கள்? நீங்கள் பெற்றுள்ள வேலை எதைப் பொருட்படுத்துகிறது? இல்லையென்றால் நாம் சொந்தமாக வைத்துள்ள அந்த சிறு வீடு எதைப் பொருட்படுத்துகிறது? நாம் சொந்தமாக வைத்துள்ள கார் எதைப் பொருட்படுத்துகிறது? 133 அழகான சிறு பெண்ணே, நீ சற்று மரியாதையற்ற காரியத்தை செய்கிறாய், இப்பொழுது நீ பெற்றுள்ள சிறிய அழகிய தோற்றம் என்ன செய்கிறது? வாலிபர்களாகிய நீங்கள் பளபளப்பாகவும், மென்மையான தலைமுடியுடனும், நேரான தோள்பட்டைகளோடும் காணப்படுகின்றீர்கள். நீங்கள் வயோகத்தினால், என்றோ ஒரு நாள் கூனிப் போவீர்கள். 134 ஆனால், கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக! நீங்கள் மீண்டும் பிறந்த ஒரு ஆத்துமாவை உடையவர்களாயிருக்க வேண்டும். அப்பொழுதே நீங்கள் என்றென்றைக்குமாய் ஜீவிப்பீர்கள், ஏனென்றால் நீங்கள் அவருடைய கிருபையினூடாக அவரைப் போலாகும்படிக்கு, அவர் உங்களைப் போலாகி, உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுகிறார். 135 ஓ, மாற்று வஸ்திரங்களை நாம் வைத்துள்ளோமே என்று நினைக்கிற நாம், வீட்டில் சில மளிகைச் சமான்கள் உள்ளன என்று நினைக்கிற நாம் என்னவாயிருக்கிறோம்? தேவனால் அதை ஒரு நொடிப் பொழுதில் எடுத்துப் போட்டுவிடக் கூடும். உங்களுடைய சுவாசத்தையே தம்முடைய கரத்தில் பிடித்து வைத்திருக்கிறார். இங்கே நம் மத்தியில் உள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்தும்போது, அவர்களைப் பற்றி எடுத்துக் கூறி, முன் கூட்டியே அறிவித்தது ஒவ்வொரு முறையும் பரிபூரணமாயிருந்து வந்துள்ளது. நமக்கு மத்தியில் போதுமான அக்கரை கொண்டவராய் மரித்துப்போன சிறிய மீனை உயிர்ப்பித்தார். யேகோவா நம்மை சுற்றிலுமிருக்கிறார், நான் இருக்கிறவராக இருக்கிறேன் என்ற அந்த மகத்தான, வல்லமையுள்ள யேகோவா நமக்குள்ளாக இருக்கிறார். 136 அவர் மரித்த போது, அவர்கள் அவரைப் பிடித்துவிட்டதாக எண்ணிக் கொண்டனர். அவர் பாதாளத்திற்குள் இறங்கினார். அவர் சிலுவையில் அறையப்பட்டு, பூமியைவிட்டுச் சென்ற அந்த நாளில், அவர் இழக்கப்பட்டோரின் ஸ்தலங்களுக்குச் சென்றார். வேதம், “அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள் பூர்வத்திலே நோவாவின் நாட்களில் தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்படியாமற்போனவைகள்” என்று கூறியுள்ளது. அவர் மரித்தபோது, அவருடைய ஆவியானது அவரைவிட்டுச் சென்றது, அவர் மீண்டும் லோகாஸாக மாறினார். பாருங்கள், அவர், “நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். நான் மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன்” என்று கூறினார். 137 வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின அக்கினி ஸ்தம்பமாய் தேவன் இருந்தார். அவர் இங்கே பூமியின் மேலிருந்தபோது…அவர் மரித்தபோது, அவர் மீண்டும் ஒளியாக திரும்பினார். பவுல் அவரைக் கண்டான். அவர் ஒரு ஒளியாய் இருந்தார். அவனோடிருந்த மற்றவர்கள் அவரைக் காணவில்லை. அவர்கள் பவுல் விழுந்ததைக் கண்டனர். ஏதோஒன்று அவனைத் தாக்கினது. அது ஒரு ஒளியாய் இருந்தது. அப்பொழுது பவுல், “நான் துன்பப்படுத்துகிறது யாரை?” என்று கேட்டான். 138 அதற்கு அவர், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவனோ, “யார் அது?” என்று கேட்டான். 139 அப்பொழுது அவர், “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைக்கிறது உனக்கு கடினமாம்” என்றார். 140 அதன் பின்னர் அவன் புறப்பட்டுச் சென்று, அந்த ஒளியைப் பற்றி ஆராய்ந்து படித்தான். எனவே பவுல் அந்த ஒளி என்னவாயிருந்தது என்று கண்டறிய வேதாகமத்திற்குத் திரும்பிச் சென்றான். அதன்பின்னரே அவன் இந்த நிரூபத்தை எழுதினான். அவர் மாறாத யேகோவாவாய் இருக்கிறார். அதே ஒளி வனாந்திரத்தில் இஸ்ரவேல் புத்திரரோடு இருந்தது. பேதுரு சிறைச் சாலையில் இருந்தபோது, அவர் ஒளியாய் உள்ளே வந்து, சிறைக் கதவுகளைத் திறந்தார். 141 அவருடைய கிருபையினால், யாருக்குமே எந்த மன்னிப்பும் இல்லை…ஓ, அவர்கள் எழுத்தறிவற்ற செய்தியாளர்களை மறக்கக் கூடுமானால், நினைவிருக்கட்டும், அது செய்தியாளர்களை மறப்பதல்ல, அது செய்தியை மறப்பதாகும். அவர் ஒரு அக்கினி ஸ்தம்ப ரூபத்தில் நம்மோடிருக்கத் திரும்ப வந்துள்ளார். அவர் அதேவிதமான தம்முடைய அற்புதங்களோடும், அடையாளங்களோடும் அசைவாடுகிறார். வேதத்திற்கு புறம்பாக எந்தக் காரியத்தையும் செய்யாமல், வேதாகமத்திற்கு கீழ்பட்டிருக்கும்படி செய்து, அவருடைய மகிமையை வெளிப்படுத்தி, தம்முடைய வல்லமையைக் காண்பிக்கிறார். அவருடைய பரிசுத்த நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! 142 நான் பைத்தியம் பிடித்தவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் ஓ, அந்த ஆசீர்வதிக்கப்பட்ட நித்திய இளைப்பாறுதல் என் உள்ளத்தில் இருக்கிறது. புயல்கள் அடித்தாலும், என் ஆத்தும நங்கூரமானது திரைக்குள்ளே பற்றிபிடித்திருக்கிறது. 143 அவர் மரித்தபோது அவரைக் காண்பதற்கு, சந்திரன் நடுநடுங்கி செயலிழந்தது போலாயிற்று. சூரியனோ நடுப்பகலில் அஸ்தமித்தது. அவர் இழக்கப்பட்ட ஸ்தலத்திற்கு சென்று, [சகோதரன் பிரான்ஹாம் நான்கு முறை பிரசங்கப் பீடத்தைத் தட்டுகிறார்—ஆசி.] கதவினைத் தட்ட, வாசலோ சுழன்று திறந்தது. வேதமோ, “அவர் காவலிலுள்ள ஆத்துமாக்களுக்கு பிரசங்கித்தார். அந்த ஆவிகள் பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்” என்று கூறியுள்ளது. அவர் இந்த பூமியிலே மரித்தப் பிறகு இது நடந்தது. என் சகோதரனே, என் சகோதரியே, அவர் மரித்து, அவருடைய பூமிக்குரிய ஊழியம் முடிவுற்றபோதும், அவர் இன்னமும் ஊழியம் செய்துகொண்டிருந்தார். அவர் இன்றிரவும் இன்னமும் ஊழியத்தில் இருக்கிறார். ஆமென். 144 அவர் இழக்கப்பட்டோரின் வாசல்களைத் தட்டினார். அவர் அங்கு சென்றார் என்று வேதம் கூறியுள்ளது. அவர், “நான் ஸ்திரீயினுடைய வித்தாயிருக்கிறேன். ஆதாம் என்னைக் குறித்தேப் பேசினான். அவர் ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட வருகிறார் என்று ஏனோக்கு கூறினது என்னைத் தான். நானே ஜீவனுள்ள தேவனுடைய குமாரன், உங்களுடைய கிருபையின் நாளில் நீங்கள் பாவஞ் செய்தீர்கள். ஆனால் தேவனுடைய வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்ற நான் வரவேண்டும் என்று தூதர்களால், ஏனோக்கினால், நோவாவினால் உங்களுக்கு தீர்க்கதரிசினமாயுரைக்கப்பட்டிருந்தது. எனவே நான் இந்த ‘இழக்கப்பட்ட தேசத்தில்’ ஒரு சாட்சியாக இங்கே இருக்கிறேன்” என்றார். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரசங்கித்தார். அவர் பாதாளத்திற்குள் சென்று, பாதாளத்தின் வாசல்களண்டை சென்று கதவைத் தட்டினார். அப்பொழுது பிசாசு கதவைத் திறந்து “நான் இப்பொழுது உன்னைப் பிடித்துவிட்டேன்” என்றான். 145 அவர், “பிசாசே, நீ நீண்ட காலமாக பெருமையடித்து ஏய்த்துக்கொண்டு திறவுகோல்களை வைத்துள்ளாய்” என்று கூறி, அவனுடைய பக்கவாட்டில் தொங்கிக் கொண்டிருந்த திறவு கோல்களைப் பிடுங்கினார். இதோ அது இங்கே வேதாகமத்தில் உள்ளது. நான் இன்னும் ஒரு நிமிடத்தில் அதை எடுத்துக் காட்டவுள்ளேன். அவர், “நீ நீண்ட காலமாக பெருமையடித்து ஏய்த்துக்கொண்டு அவைகளை வைத்துள்ளாய். ஆனால் நான் அவைகளைக் கைப்பற்ற வந்தேன்” என்று கூறி, அந்தத் திறவுகோல்களைப் பிடுங்கிக்கொண்டு, அவனை உதைத்து உள்ளேத் தள்ளி கதவை அடைத்தார். பின்னர் அங்கிருந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு இவர்களை கூட்டிக் கொண்டார். மூன்றாம் நாளிலே அவர் உயிரோடெழுந்தபோது, கல்லறையில் நித்திறையாயிருந்தவர்களும் அவரோடு உயிர்த்தெழுந்தனர். ஓ, அல்லேலுயா! புலவன் இவ்வாறு கூறினதில் வியப்பொன்றுமில்லையே: ஜீவிக்கும்போது, அவர் என்னை நேசித்தார்; மரிக்கும்போது, அவர் என்னை இரட்சித்தார்; அடக்கம்பண்ணப்பட்டபோது, அவர் என் பாவங்களை அதிதூரம் கொண்டு போய்விட்டார். உயிர்த்தெழுந்தபோது, அவர் என்றென்றைக்கும் இலவசமாய் நீதிமானாக்கினார், என்றோ ஒரு நாளில் அவர் வருகிறார், ஓ, மகிமையான நாள். 146 நம்முடைய இருதயங்களை கிறிஸ்தவ ஐக்கியத்தோடு, தேவனுடைய அன்பினால் பிணைக்கப்படுகிற இணைப்பு ஆசீர்வதிக்கப்படுவதாக. அவர் உயிர்த்தெழுந்தபோது, அவருடைய பணி இன்னும் முடிவடையாமலிருந்தது. அவர் இன்னும் சில வேலைகளை செய்ய வேண்டியதாயிருந்தது. 147 வேதமோ, “அவர் உன்னதத்திற்கு ஏறி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்” என்று கூறியுள்ளது. பூமியின் மீது அந்தகாரமும், இருளும், மரணமும், களைப்புமான சூழ்நிலையேக் காணப்பட்டது. பாவ நிவிர்த்தி இன்னும் செய்யப்படாத காரணத்தால், ஜெபங்கள் மேலே வந்தடைய முடியவில்லை. ஆனால் அவர் அந்த திரையினூடாக சென்று கிழித்தெறிந்தார். அவர் அந்த வழியைத் திறந்தார். அவர் சுகவீனத் திரையைக் கிழித்தெறிந்தார். அவர் பாவத்திரையை கிழித்தெறிந்தார். அவர் களைப்பின் திரையை கிழித்தெறிந்தார். அவர் ஊக்கம் அழிக்கப்படுகின்ற திரையை கிழித்தெறிந்தார். அவர் ஒவ்வொரு திரையையும் கிழித்தெறிந்து, பேதையாயிருக்கிற மனிதனுக்காக ஒரு பெரும்பாதையை உண்டுபண்ணி, இராஜாவினுடைய பெரும்பாதையில் நடக்கச் செய்தார். ஓ, என்னே, அவர் சந்திரனையும், நட்சத்திரங்களையும் கடந்து மேலே சென்றார். 148 அவருக்குப் பின்னே பழைய ஏற்பாட்டு பரிசுத்தவாங்களான, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் பின் தொடர்ந்து சென்றனர். அவர்கள் நேராக வானாதி வானங்களுக்குள்ளாகச் சென்றனர். அவர்கள் அந்த நகரத்திற்கு தூரமாக இருக்கும்போதே, அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. அப்பொழுது ஆபிரகாம், “நான் காண வாஞ்சித்த நகரம் அது தான். ஓ, ஈசாக்கே, இங்கே வா, யாக்கோபே, இங்கே வா, ஓ, நாம் பூமியிலே அந்நியர்களும், பரதேசிகளுமாயிருந்தோம், ஆனால் அதோ உள்ளது அந்த நகரம். அந்த ஒன்றிற்காகத்தான் நாம் காத்திருந்தோம்” என்று கூறினான். 149 அவர்கள், “அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்” என்று சத்தமிட்டனர் என்று வேதம் கூறியுள்ளது. 150 வாசல்களுக்கு பின்னால் இருந்த தூதர்கள் இங்கே பின்னால் இருந்த இந்த தூதர்களிடத்தில், “யார் இந்த மகிமையின் இராஜா?” என்று கேட்டனர். 151 அப்பொழுது இங்கிருந்த தூதர்கள், அந்த தீர்க்கதரிசிகள், “சேனைகளின் கர்ததர், அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ளவர்” என்று கூறினர். 152 அவர்கள் அந்த பொத்தான்களை அழுத்த, அந்த பெரிய கதவானது சுழன்றவாறே திறந்தது. அந்த வீதியின் நடுவிலே அவர் ஜெயவீரராய், வெற்றிச் சிறந்தவராய், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் அவருக்கு பின்னால் நடந்து வர, இவரோ முன்சென்றார். பின்னர் சிங்காசனத்தின் மேல் அமர்ந்து, “பிதாவே, இதோ அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உம்முடையவர்கள்” என்று கூறினார். 153 அப்பொழுது அவர், “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்” என்றார். நாம் படிக்கும்போது, அது இங்கே வேதத்தில் இருப்பதை நாம் கண்டறிகிறோம். சரி. 154 இப்பொழுது கவனியுங்கள். நாம் 8-ம் வசனத்தில் இருக்கிறோம். …சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம். அது மரணமாயிருக்கிறது. நாம் மரணத்தை காண்கிறதில்லை, அதே சமயத்தில், நாம் இன்னமும் மரித்துக் கொண்டிருக்கிறோம். நாம் மரணத்தைக் காண்கிறோம். ஆனால் 9-ம் வசனம், “ஆனால் நாம் இயேசுவைக் காண்கிறோம்!” ஆமென். கவனியுங்கள். என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிப்பார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். அவர் ஏன் தேவதூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டார்? அப்பொழுதுதான் அவரால் மரணத்தை ருசி பார்க்க முடிந்தது. அவர் மரிக்க வேண்டியதாயிருந்தது. அவர் வந்து மரிக்க வேண்டியவராயிருந்தார். 155 நண்பனே, இங்கே பார். இதை ஒருபோதும் மறந்து போக வேண்டாம். இயேசு சென்று கொண்டிருந்தபோது, மலையின் மேல் ஏறிக்கொண்டிருந்தபோது, மரணமானது அவருடைய தலையைச் சுற்றி ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது, 156 நாம் நம்முடைய காட்சியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எருசலேமில் சம்பவித்ததற்குக் கொண்டு செல்வோம். உங்களால் எப்படி அதைப் புறக்கணிக்க முடிந்தது. என்னால் வீதியினூடாக வருகின்ற ஒரு சத்தத்தைக் கேட்க முடிகிறது. அது என்னவாயிருக்கிறது? அது ஏதோ குதிப்பதனால் எழும் ஓசையாயிருந்தது. அது பண்டைய கரடு முரடான சிலுவை தமஸ்குவின் வாசல்களண்டை தரையிலே உள்ள தளப்பாவில் காணப்படும் உருளைக் கற்களின் மேல்பட்டு குதித்துக் குதித்து செல்கிறது. அந்தப் பெரிய உருளைக் கற்கள் இன்னமும் அங்கே காணப்படுகின்றன. இந்தப் பெரிய உருளைக் கற்களின் மீது பட்டு ஒருவிதமான பம்டி-பம்ப் என்ற ஓசையை எழுப்புகிறது. வீதியிலே தெறிக்கப்பட்ட இரத்தத்தை நான் காண்கிறேன். அது என்னவாயிருக்கிறது. அது எந்த ஒரு தீங்கும் செய்யாமல் நன்மை மாத்திரமே செய்த மனிதனுடைய இரத்தமாயிருக்கிறது. ஜனங்களோ குருடராயிருந்தனர். அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் அவரை அடையாளங்கண்டு கொள்ளவில்லை. நீங்களோ, “குருடாயிருந்தனரா? அவர்கள் தங்களுடைய பார்வையை உடையவர்களாயிருந்திருக்கக் கூடுமே?” என்று கேட்கலாம். 157 நீங்கள் உங்களுடைய பார்வையைப் பெற்றிருந்தும் குருடராயிருக்க முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வண்ணமாக கூறியுள்ளது. எலிசா தோத்தானிலே செய்தது நினைவிருக்கிறதா? அவன் புறப்பட்டுபோய், அந்த ஜனங்களைக் குருடாக்கி, “இப்பொழுது என் பிறகே வாருங்கள்” என்றான். அவர்கள் அவனுக்கு குருடாயிருந்தனர். 158 ஜனங்கள் இன்றிரவு குருடாயிருக்கின்றனர். தெய்வீக சுகமளித்தலில் விசுவாசங்கொண்டிராத ஒரு குறிப்பிட்ட சபை அங்கத்தினன் ஒரு சமயம் என்னிடத்தில் வந்து, “என்னைக் குருடாக்கும். என்னை குருடாக்கும்.” என்று கூறினான். அது சகோதரன் ரைட்ஸ் அவர்களுடைய வீட்டில் நடந்தது. அவன், “என்னைக் குருடாக்கும்” என்றான். மேலும் அவன், “பவுல் ஒரு முறை ஒரு மனிதனை குருடாக்கினான். எனவே நீர் என்னை குருடாக்கும்” என்றான். 159 அதற்கு நான், “நண்பனே, பிசாசு அதை ஏற்கெனவே செய்துள்ளான். நீ ஏற்கெனவே குருடாயிக்கிறாய். நிச்சயமாகவே, நீ குருடாயிருக்கிறாய்” என்றான். 160 அப்பொழுது அவர், “இந்தச் சிறு பெண்ணைக் குணப்படுத்தும், அப்பொழுது நான் உம்மை விசுவாசிப்பேன்” என்றான். 161 அதற்கு நான், “நீர் அந்தப் பாவியை இரட்சியும். அப்பொழுது நான் உம்மை விசுவாசிப்பேன்” என்றேன். நிச்சயமாக. 162 அப்பொழுது அவன், “ஓ” என்று கூறி, “அவன் விசுவாசிக்க வேண்டும்” என்று கூறினான். 163 அப்பொழுது நான், “அதேக் காரியம்தான் இங்கும் உள்ளது. அது இராஜாதிபத்திய தேவனுடைய கிருபையினூடாக வர வேண்டும்” என்று கூறினேன். 164 பிசாசு, இப்பிரபஞ்சத்தின் தேவன் ஜனங்களின் கண்களை குருடாக்கியிருக்கிறான். வேதமோ, “அவர்கள் கண்களிருந்தும், காண முடையாதவர்களாயிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளது. 165 இதோ அவர் வீதியிலேப் போகிறார், வீதியிலே இரத்த அடிச்சுவடுகளோடு சிலுவையை இழுத்துக்கொண்டேப் போகிறார். மரணத்தின் தேனி அவரைக் கொட்டி, “இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் உன்னை பிடித்துவிடுவேன்” என்று அவரிடத்தில் ரீங்காரமிட்டுக்கொண்டிருந்தது. அவர் பலவீனமாகிக்கொண்டேயிருந்தது, தண்ணீருக்காக தாகமாயிருந்தார். 166 நான் ஒரு முறை துப்பாக்கியால் சுடப்பட்டு, வயலில் கிடந்தபோது, இரத்தம் என்னிடத்திலிருந்து கொட்டிக்கொண்டேயிருந்தது. அப்பொழுது நான் தண்ணீருக்காக கதறினேன். என்னுடைய நண்பன் அப்பொழுது உடனே ஓடி, அவனுடைய தொப்பியை எடுத்து அதில் தண்ணீர் நிரப்பிகொண்டு வந்தான். அது ஒரு குட்டையில் தேங்கி நின்ற தண்ணீராயிருந்தபடியால், அதில் புழுக்கள் இருந்தன. அவன் அங்கிருந்து வந்தபோது, நான் என்னுடைய வாயைத் திறக்க, அவன் அந்தத் தொப்பியில் இருந்த தண்ணீரைப் பிழிந்து என் வாயில் ஊற்றினான். காரணம் என் காலில் துப்பாக்கியால் சுடப்பட்ட இடத்திலிருந்து இரத்தமானது ஒரு ஊற்றுபோல பீறிட்டு அடித்துக் கொண்டிருந்தது. தாகமாயிருந்தேன். 167 அப்பொழுது அந்தக் காலை ஒன்பது மணியிலிருந்து மாலை மூன்று மணி வரை எல்லா இரத்தமும் வடிந்துக்கொண்டிருந்த என் ஆண்டவருக்கு அது எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். அவருடைய வஸ்திரத்தில் முதலில் சிறு புள்ளிகள் போன்று காணப்படுவதை நான் காண்கிறேன். அந்த எல்லா சிறு புள்ளிகளும் பெரிதாகி, பின்னர் ஒரு பெரிய இரத்தக் கறையாகி, வழிந்து, அவர் நடந்து செல்லுகையில் அவருடைய காலில் வழிந்து வருவதை நான் காண்கிறேன். அது இம்மானுவேலினுடைய இரத்தமாயிருந்தது. ஓ, அதற்கு இந்தப் பூமி பாத்திரமாயிருக்கவில்லை. 168 ஆனால் அவர் மேலே நடந்து செல்லுகையில் இந்த தேனீ அவரைக் கொட்டிக் கொண்டிருந்தது. அது என்ன செய்தது? அது முடிவிலே அவரை கொட்டி கொடுக்கைப் பதித்தது. ஆனால் சகோதரனே, ஒரு பூச்சியோ அல்லது ஒரு தேனியோ உங்களை ஒரு முறை கொட்டினால், அதனுடைய கொட்டும் வேலை அத்துடன் முடிவடைகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். என்வே அதனால் அதற்குப்பின் மீண்டும் ஒருபோதும் கொட்டவே முடியாது. ஏனென்றால் அது கொட்டும்போது, அதனுடைய கொடுக்கை அதில் இழந்துவிடுகிறது. அந்தக் காரணத்தினால்தான் தேவன் மாம்சமாக வேண்டியதாயிருந்தது. அவர் மரணத்தின் கொடுக்கை தன்னுடைய சரீரத்திற்குள்ளாகப் பெற்றுக்கொண்டு, பின்னர் அவர் அந்த மரணத்தின் கொடுக்கை வெளியே எடுத்தார். கர்த்தருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! மரணம் வாய்திறவாமல் ரீங்காரமிட்டு கொட்டலாம், ஆனால் அதனால் உங்களுக்கு தீங்கிழைக்க முடியாது. 169 பவுல், தேனீ அவனைச் சுற்றி ரீங்காரமிடுவதையும், மரணம் நெருங்கிக் கொண்டிருந்ததையும் அவன் உணர்ந்தபோது, அவன், “ஓ, மரணமே, உன் கூர் எங்கே?” என்றான். அவனால் இம்மானுவேலின் சரீரம் வைக்கப்பட்டிருந்த கல்வாரியை சுட்டிக் காட்ட முடிந்தது. “உன் ஜெயம் எங்கே? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறினான். ஆம். 170 நாம் எல்லாக் காரியங்களையும் காண்கிறதில்லை. …ஏனென்றால்,…தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடி சூட்டப்பட்டதைக் காண்கிறோம். …ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர் அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டு வந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. அந்த ஒரே வழியிலேயே அவர் நம்முடைய இரட்சிப்பின் அதிபதியாக முடிந்தது, என்வே அவர் பாடுபட வேண்டியதாயிருந்தது. 171 இப்பொழுது இங்குள்ள இந்த அழகான வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். இப்பொழுது கவனியுங்கள். …எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; ஓ, அங்குள்ள திராட்சை செடியையும், அதனுடைய கொடியையும் நீங்கள் காணவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] யாவரும் ஒருவராலே. …இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: புரிகிறதா? ஏன்? அடுத்த வசனத்தைக் கவனியுங்கள். உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். 172 மனுஷன் எப்பொழுதுமே மரணத்திற்கு பயந்திருந்தான். கிறிஸ்து பாவமாகி, மரணத்தை தம்மேல் ஏற்றுக் கொள்ளத் தாழ்த்தினார். நாம் சோதிக்கப்படுகின்றதுபோல அவரும் சோதிக்கப்பட்டபடியினால், அவர் நம்மை, “சகோதரன்” என்று சொல்ல வெட்கப்படவில்லை. நீங்கள் நிற்கிற அதேவிதமான சோதனையில் அவர் நின்ற காரணத்தினால், அவரால்…சரியான விதமான பரிந்து பேசுதலை செய்ய முடிகிறது. அவர் உங்களுடைய ஸ்தானத்தை ஏற்றுக்கொண்டார், நீங்களே அதை உங்களுக்காக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்திருக்கிறீர்கள். 173 ஆகையால் சகோதரனே, சகோதரியே நீங்கள் அதை காண்கிறதில்லையா? முழுக் காரியமும் கிருபையாயிருக்கிறது. அதனுடையதெல்லாம் கிருபையாயுள்ளது. எப்படியாயினும் அது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது அல்ல. அது அவர் உங்களுக்காக ஏற்கெனவே என்ன செய்துள்ளார் என்பதாகும். இப்பொழுது, நீங்கள் உங்களுடைய இரட்சிப்பிற்கு தகுதியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. உங்களுடைய இரட்சிப்பு ஒரு ஈவாக உள்ளது. நீங்கள் நீதியாகும்படிக்கு கிறிஸ்து பாவமானார். அவர் நம்முடைய இரட்சிப்பிற்கான சரியான ஒரு பிரதான அதிபதியாயிருக்கிறார். ஏனென்றால் நாம் பாடுபட்டதுபோலவே அவர் பாடுபட்டார். நாம் சோதிக்கப்படுகிறது போலவே அவர் சோதிக்கப்பட்டிருக்கிறார். அவர் “நம்முடைய சகோதரன்” என்று அழைக்கப்பட வெட்கப்படவில்லை, ஏனென்றால் நாம் எதனூடாகச் செல்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். ஓ, அவருடைய நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக! ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். 174 ஓ, என்னே! அவர் ஒரு தூதனாகவில்லை. அவர் ஆபிரகாமின் வித்தானார். “நாம் கிறிஸ்துவுக்குள் மரிக்கின்றபடியினால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறோம்.” பார்த்தீர்களா? அவர் ஒருபோதும் தேவதூதருக்கு உதவியாகக் கைக்கொடுக்கவில்லை. அவர் ஒருபோதும் ஒரு தூதனாகவில்லை. அவர் மனிதனானார். அவர் ஆபிரகாமின் வித்தாகி, நம்மை மீண்டும் தேவனோடு ஒப்புரவாக்கும்படிக்கு, தம்முடைய சொந்த மாம்ச சரீரத்தில் மரணத்தின் கொடுக்கை ஏற்றுக் கொண்டு, இப்பொழுது அங்கே பரிந்து பேசுபவராக வீற்றிருக்கிறார். என்னே, நண்பனே, நம்மால் எப்படி அதைப் புறக்கணிக்க முடியும்? 175 கவனியுங்கள். …அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியாராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது. 176 அதாவது அவர் ஒப்புரவாக்குபவராயிருக்கலாம்! பாருங்கள், தேவனுக்கும் மனிதனுக்குமிடையே பகை இருந்தது. எனவே எந்த மனிதனுமே… அவர் தூதர்களை, தீர்க்கதரிசிகளை அனுப்பினார். அவர்களால் உங்களுடைய ஸ்தானத்தை எடுக்க முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் தங்களுக்காகவே ஜெபிக்க வேண்டியதாயிருந்தது. எனவே அவர்களால் அந்த ஸ்தானத்தை எடுக்க முடியவில்லை. 177 அதன்பின்னர், அவர் நியாயப்பிரமாணத்தை அனுப்பினார். நியாயப்பிரமாணமே நம்மை சிறையிலடைக்கிற ஒரு காவற்காரனாயிருந்தது. அதனால் நம்மை வெளியேக் கொண்டுவர முடியாததாயிருந்தது. அவர் நியாயப்பிரமாணத்தை அனுப்பினார். அவர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார். அவர் நீதிமான்களையும் மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் அனுப்பியும் பாவநிவிர்த்தி செய்ய முடியாமற்போயிற்று. ஆனால் அவர் இறங்கி வந்து நம்மில் ஒருவரானார். ஓ, என்னே! 178 நமக்கு இப்பொழுது இன்னும் அதிக நேரம் இருந்தால் நலமாயிருக்கும், நான் மீட்பின் பிரமாணத்தைக் குறித்துப் பேச விரும்புகிறேன். ஆனால் நமக்கு நேரமில்லை. ஆயினும் சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுங்கள். அந்த அழகான காட்சி ரூத் மற்றும் நகோமியில் உள்ளது. நீங்கள் அங்கே அந்த ஒப்புரவாகுதலைக் காண்பீர்களேயானால், இழந்த விழுந்துபோன நிலைமையில் காணப்படுகிற மனிதனை மீட்கிற மனிதன், எப்படியாய் அந்த நிலக்கிழார், இழந்த நிலைமையில் உள்ள நபருக்கு நெருங்கின இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. அந்தக் காரணத்தினால்தான் போவாஸ்…நகோமிக்கு ஒரு நெருங்கின இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது, அப்பொழுதே அவனால் ரூத்தை மீட்க முடிந்தது. அப்பொழுது அவன் அதற்கு பாத்திரவானாயிருக்க வேண்டியதாயிருந்தது. அவன் இழக்கப்பட்டதை மீட்க, அதைச் செய்யக் கூடியவனாயிருக்க வேண்டியதாயிருந்தது. போவாஸ் தன்னுடைய பாதரட்சைகளைக் கழற்றிப் போட்டுவிட்டு, அவன் நகோமியையும், அவளுடைய எல்லா உடைமையையும் மீட்டிருந்தான் என்று ஒலிமுகவாசலண்டையிலே ஒரு பகிரங்க அறிக்கையைப் பண்ணினான். எனவே அவன் நெருங்கின இனத்தானாயிருக்க வேண்டியதாயிருந்தது. 179 அந்தக் காரணத்தினால்தான் கிறிஸ்து நமக்கு நெருங்கின இனத்தாராக வேண்டியதாயிருந்தது. அவர் இறங்கி வந்து ஒரு மனிதனாயிருந்தார். அவர் சோதிக்கப்பட்டு பாடுபட்டார். அவர் நகைக்கப்பட்டார், பரிகசிக்கப்பட்டார், துன்பப்படுத்தப்பட்டார், அலட்சியப்படுத்தப்பட்டு, “பெயல்செபூல்” என்று அழைக்கப்பட்டு, பரியாசம்பண்ணப்பட்டு, தலையாய கொடூர தண்டனையின் கீழ் மரணத்துக்கேதுவாய்ப் பாடுபட்டார். புரிகிறதா? அவர் நமக்கு நெருங்கின இனத்தானாக வேண்டியதாயிருந்தது. நீங்கள் தவறாக குற்றஞ்சாட்டப்படுகின்றபடியால், அவர் தவறாக குற்றஞ்சாட்டப்பட வேண்டியதாயிருந்தது. நீங்கள் சுகவீனமாயிருக்கிறபடியால், அவர் சுகவீனத்தை சுமக்க வேண்டியதாயிருந்தது. அவர் பாவங்களை சுமக்க வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் அது உங்களுடைய பாவமாயிருந்தது. எனவே அவர் நெருங்கின இனத்தானாக வேண்டியதாயிருந்தது. அவர் நமக்கு நெருங்கின இனத்தானாயிருக்கும்படியான அந்த ஒரே வழியிலேயே அவரால் நம்மை மீட்க முடிந்தது. எப்படியாய் அவர் நெருங்கின இனத்தானாகி, பாவ மாம்ச சாயலை தரிப்பதன் மூலம் நம்மில் ஒருவரானார். அந்த சரீரத்தில் அவர் கிரயத்தை செலுத்தி மீட்டு, நம்மை மீண்டும் பிதாவின் ஐக்கியத்திற்குள்ளாகக் கொண்டுவந்தார். ஓ, என்ன ஒரு இரட்சகர்! எந்த வார்த்தைகளினாலுமே அதை வெளிப்படுத்திக் கூற முடியாது. …ஆதலால், அவர் தாமே சோதிக்கப்பட்டு பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். 180 உதவிசெய்ய என்பதன் பொருள் “பரிவிரக்கம் கொள்ளுதல்” என்பதாகும். உங்களுடைய ஏற்றாத் தாழ்வுகளிலும், உங்களுடைய சிறிய முழு நுணுக்கமான காரியங்களிலும், உங்களால் தாங்கிக் கொள்ள முடியாத மிகப் பெரிய உங்களுடைய சோதனைகளிலும் உங்களோடு அவர் பரிவிரக்கமுடையவராயிருக்கவே, அந்தக் காரணத்திற்காகவே அவர் இந்தவிதமானார். உங்களோடு எப்படி பரிவிரக்கங்கொள்ள வேண்டும் என்பதை அவர் அறிந்திருக்கிறார். எனவே அவர் பரிந்துபேசவே அங்கு வீற்றிருக்கிறார். உங்களை நேசிக்கவே அவர் அங்கு வீற்றிருக்கிறார். நீங்கள் வழிதப்பிப்போனாலும், அவர் உங்களைக் கைவிடமாட்டார். அவர் அப்பொழுதும் உங்களைப் பின்தொடர்ந்து வந்து, உங்களுடைய இருதயத்தைத் தட்டுவார். அனுதினமும் தேவன் தன்னுடைய இருதயத்தை தட்டுகிறார் என்பதை அறிந்து கொண்டால், பின்வாங்கிப்போனவராக ஒருவரும் இந்தக் கட்டிடத்தில் இருக்கமாட்டார்கள். நீங்கள் இந்தப் பூமியில் ஒரு மானிடனாய் இருக்கும்வரையில் அவர் அதைச் செய்வார், ஏனென்றால் அவர் உங்களை நேசித்திருக்கிறார். அவர் உங்களை மீட்டுவிட்டார். 181 அன்பின் கருப்பொருளை வெளிப்படுத்திக் கூற புலவர்கள் முயற்ச்சித்துள்ளனர், நூலாசிரியர்கள் முயற்ச்சித்துள்ளனர், மனிதன் முயற்ச்சித்துள்ளான். ஆனாலும் அது மானிட வெளிப்படுத்தல்களில் கண்டறியப்பட முடியவில்லை. ஒருவர் இவ்வாறு கூறினார்: ஓ, தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐசுவரியமும், தூய்மையுமானது, எவ்வளவு என ஆழம் காண இயலாது, பெலமானது! அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்பதே பரிசுத்தவான்கள் மற்றும் தூதர்களின் பாடலாகும். நாம் சமுத்திரத்தை மையினால் நிறைத்து, வானங்களை தோல் காகிதமாக தயாரித்து, பூமியிலுள்ள ஒவ்வொரு தண்டையும் இறகாக உபயோகித்து, ஒவ்வொரு மனிதனையும் எழுதும் பணியில் அமர்த்தினால், தேவனுடைய அன்பை எழுதுவதென்பது, சமுத்திரத்தையே உலரச் செய்துவிடும். ஆகாயத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை படர்ந்துள்ள தோள் சுருள் தேவனுடைய அன்பு அனைத்தையும் கொள்ளுமோ! 182 நீங்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டீர்கள். தேவனிடத்தில் நம்மை மீண்டும் ஒப்புரவாக்க அவர் வந்து எப்படியாய் அந்த மகத்தான தியாகத்தை செய்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள வழியேக் கிடையாது. அதன்பின்னர் அவர் திரும்பிச் சென்று, “இப்பொழுது, நான் உங்களைத் திக்கற்றவர்களாகவிடேன். நான் உங்களிடத்திற்கு திரும்பவும் வந்து உலகத்தின் முடிவுபரியந்தமும் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருப்பேன்” என்றார். 183 நாம் இன்றைக்கு இங்கே கடைசி காலத்தில் அதே இயேசுவோடு, அதேக் காரியங்களோடு, அதே அடையாளங்களோடு, அதே அதிசயங்களோடு, அதே இரட்சிப்போடு, அதே ஆவியானவர் அதே காரியங்களை செய்கிறதோடும், அதே சுவிசேஷத்தோடும், அதே வார்த்தையோடும், அதே எடுத்துக்காட்டுகளோடும், அதே வெளிப்படுத்துதல்களோடும், அதே மாதிரியான ஒவ்வொரு காரியத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருக்கக் கூடாது என்றே அது நமக்கு உணர்த்துகிறது. ஏனென்றால் நாம் தேவ குமாரனோடு என்ன செய்கிறோம் என்பதற்கு என்றோ ஒரு நாள் கணக்கொப்புவிக்க வேண்டும். 184 பாவியே, பின்வாங்கிப் போனவரே, இன்றிரவு அவர் உங்களுடைய கரங்களில் இருக்கிறார். நீங்கள் அவரோடு என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்களோ, “நல்லது, நான் அதை உதறிவிடுவேன்” என்று கூறலாம். ஆனால் நினைவிருக்கட்டும், நீங்கள் அதைச் செய்யாதீர்கள். பின்னர் வேறு வழியேக் கிடையாது, நீங்கள் ஒரு பாவியாயிருந்தால், அப்பொழுது நீங்கள் இந்த் கட்டிடத்தை விட்டு அதே பாவியாகத்தான் செல்ல முடியும். உங்களால் அதை தவிர்க்க முடியாது. 185 பிலாத்து ஒரு இரவு அதைச் செய்ய முயற்சித்தான். அவன் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொல்லி, அவன் தன்னுடைய கைகளைக் கழுவினான், மேலும் அவன், “எனக்கு இதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. நான் அதை ஒருபோதும் காணாதது போன்று இருக்கிறேன். நான் அந்த சுவிசேஷத்தைக் குறித்து ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை. எனக்கு அதனோடு எந்த சம்மந்தமும் வேண்டாம்” என்றான். அவனால் அதை தன்னுடைய கரங்களிலிருந்து கழுவிவிட முடிந்ததா? அவனால் முடியவில்லை. 186 முடிவிலே பிலாத்துவிற்கு என்ன சம்பவித்தது என்று தெரியுமா? அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. கடந்த வருடம் சுவிசேஷத்தை பிரசங்கிக்க நாங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்தோம். அங்கே மக்களால் ஆர்வமாக நம்பப்படும் ஒரு பழங்கால கட்டுக் கதை இவ்வாறு கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சிலுவையேற்ற நேரத்தின் போது அங்குள்ள குளத்தில் கவனித்துக் காண உலகெங்கிலுமிருந்து ஜனங்கள் வருகின்றனர். பிலாத்து அந்தக் குளத்தில் குதித்து மூழ்கி தற்கொலை செய்துகொண்டானாம். ஒவ்வொரு வருடமும் அதே நேரத்தில் தேவன் அந்தத் தண்ணீரை புறக்கணித்துவிட்டார் என்று காண்பிக்கும்படியாக அந்தக் குளத்திலிருந்து நீல நிறத்தில் பொங்குகிறதாம். தண்ணீர் ஒருபோதும் உங்களுடைய கரங்களிலிருந்து அல்லது உங்களுடைய ஆத்துமாவிலிருந்து இயேசுவின் இரத்தத்தைக் கழுவிட முடியாது. அதைச் செய்வதற்கு ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு. அது உங்களுடைய தனிப்பட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டு, தேவனிடத்தில் ஒப்புரவாகுவதேயாகும். நாம் ஜெபம் செய்வோமாக. 187 பரலோகப் பிதாவே, நாங்கள் வார்த்தைக்காக இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகிறோம். “ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.” நாங்கள் இயேசுவிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த மகத்தான நாளைக் காண்கையில், எப்படிப்பட்ட அடையாளங்களும், அற்புதங்களும் சம்பவிக்கின்றன என்றும், நாங்கள் எப்படி இந்தக் காரியங்களை நழுவிச் செல்ல விட்டுவிடுகிறோம் என்பதையும் காண்கிறோம். தேவன் இன்றிரவு இந்தக் கூடாரத்தில் உள்ள ஜனங்களின் கண்களைத் திறந்து, நாங்கள் இந்தக் கடைசி மணி நேரத்தில் இருக்கிறோம் என்பதை காணவும், புரிந்து கொள்ளவும் செய்வாராக. காலமோ விரைந்தோடிக் கொண்டிருக்கிறது. நாம் இங்கே மிக நீண்ட காலம் இருக்கப் போவதில்லை. நாங்கள் இயேசுவைக் காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் துரோகிகளாக எண்ணப்படுவோம், வேறு போக்குச் சொல்ல இடமேக் கிடையாது. இந்தக் காலையில், அப்பாலுள்ள தூர தேசத்திலிருந்து அந்த மனிதன் இங்கே வருவதைக் குறித்தும், அவனைக் காணுவதைக் குறித்தும் சந்தேகத்தின் நிழலுக்கு அப்பால், அந்த சக்கர நாற்காலியிலிருந்து அவன் எழுந்து தன்னுடைய பார்வையை பெற்றுக்கொள்வதையுங் குறித்து மகத்தான, வல்லமையான தரிசனத்தை நீர் அளித்தீர். அவனுடைய கால்கள் உறுதியடைந்து, இந்தக் கட்டிடத்தினூடாக ஓடி, களிகூர்ந்து, தேவனைத் துதித்தான். அது தேவன் இன்னமும் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார் என்பதையே காண்பிக்கிறது. தரிசனங்களைக் காண்பதென்பது, “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ அதையேயன்றி, வேறோன்றையும், தாமாய்ச் செய்யமாட்டார்” என்று இயேசு கூறினது போன்றே உள்ளது. 188 குருடர் அவரைப் பின் தொடர்ந்து சென்று, “எங்கள் மேல் இரக்கமாயிரும்” என்றனர். 189 அப்பொழுது அவர் அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது” என்றார். 190 இப்பொழுதும் கர்த்தாவே, நாங்கள் இயேசுவைக் காண்கிறோம். நாங்கள் எல்லாக் காரியங்களையும் காண்கிறதில்லை. நாங்கள் எங்களுடைய பரிசுத்தவான்களை கல்லறையண்டைக்கு கொண்டு செல்லும்போது, ஒருவர் மற்றொருவருடைய கல்லறையின் மீது நடப்பதை நாங்கள் காண்கிறோம். ஆனால் வாக்குத்தத்தம் செய்த இயேசுவை நாங்கள் காண்கிறோம். அவர் எங்களோடு இருப்பதை நாங்கள் காண்கிறோம். கல்லறையில் இருந்த இயேசுவை அல்ல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த இயேசுவை அல்ல; ஆனால் இன்றிரவு எங்களோடுள்ள இயேசுவையே காண்கிறோம். அவர் தம்முடைய எல்லா வல்லமையிலும், அடையாளங்களிலும், அதிசயங்களிலும் வெளிப்படுத்தப்பட்டதை நாங்கள் காண்கிறோம். 191 தேவனே இந்த பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாங்கள் ஒருபோதும் கவலையற்றவர்களாயில்லாமலிருப்போமாக. ஆனால் இயேசுவானவர் வந்து பரமவீட்டிற்கு எங்களை அழைத்து செல்லும் அந்த நாள் வரையில் நாங்கள் அதைத் தழுவிக் கொண்டு, அதை ஏற்றுக் கொண்டு, பயபக்தியாயிருந்து, அதன் மூலம் ஜீவிப்போமாக. கர்த்தாவே அதை அருளும். நாங்கள் அதை அவருடைய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். 192 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், பரிசுத்த ஆவியின் தெய்வீக பிரசன்னதின் கீழாக இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் உள்ள எந்த ஒரு நபராவது, “சகோதரன் பிரான்ஹாம், நான் தவறாயிருக்கிறேன் என்று நான் உறுதி கொண்டுள்ளேன். தேவன் என்னுடைய பாவங்களை எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். நான் தவறாயிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். நான் அவரண்டை என்னுடைய கரத்தை உயர்த்தி இன்றிரவு இரக்கத்திற்காக வேண்டுகிறேன். தேவனே என்னண்டை இரக்கமாயிரும். நான் தவறாயிருக்கிறேன்,” என்று கூறுவீர்களா என்று நான் வியப்புறுகிறேன். நீங்கள் அதைச் செய்வீர்களா? 193 நாங்கள் சற்று நேரம் காத்திருக்கையில், இங்குள்ள ஒரு நபர் ஞானஸ்நானம் பண்ணப்பட விரும்பினால், இன்னும் சற்று நேரத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறோம். நீங்கள் ஒரு பாவியாய் இருந்தால், நான் மனந்திரும்ப மனதாயிருக்கிறேன் என்று கூறுங்கள். இணையற்ற அன்புக் கொண்டவராய் மரித்த அப்பேர்ப்பட்டவரை எப்படி உங்களால் புறக்கணிக்க முடியும்? பரலோகத்தின் பரிசுத்த தேவன் ஒரு பாவமுள்ள மனிதனானார்; அவர் பாவம் செய்த காரணத்தினால் அல்ல; ஆனால் அவர் உங்களுடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு, அவைகளை கல்வாரிக்கு சுமந்து சென்றார். அந்த மன்னிப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்களா? இன்றிரவே நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்களா? நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், யாரேனும், “சகோதரன் பிரான்ஹாம், என்னை நினைவு கூருங்கள். நான் என்னுடைய கரங்களை கிறிஸ்துவினண்டை உயர்த்தி, ‘என்னிடத்தில் இரக்கமாயிரும். நான் தவறாயிருக்கிறேன். நான் தேவனோடு ஒப்புரவாக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேன்’” என்று கூறுகிறேன் என்று கூறுங்கள். நீங்கள் உங்களுடைய கரத்தை உயர்த்துவீர்களா? சரி, ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்களாயிருந்தால், அப்படியானால் நாம் ஜெபம் செய்வோமாக. 194 பிதாவே, இங்குள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்களாயிருக்கிறபடியால், அவர்கள் அமைதியாக தரித்திருந்து, அதேவிதமாக சாட்சி பகர்ந்துள்ளபடியால், அவர்களுடைய பாவங்கள் யாவும் இரத்தத்தின் கீழே இருக்கின்றபடியால், நாங்கள் இன்றிரவு உமக்கு நன்றி செலுத்துகிறோம். நான் அதற்காக மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கர்த்தாவே, அவர்களை ஆசீர்வதியும், ஓ, இரத்த பலியினூடாக வார்த்தையைக் கேட்பதனால் அவர்கள் ஒப்புரவாகுதலை கண்டடைந்துள்ளதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வார்த்தையைக் கொண்டு, தண்ணீர் கழுவுதலினால் அது எங்களை சுத்திகரிக்கிறது. அது எங்களை மகத்தான ஸ்தலத்திற்கு கொண்டு வருகிறது, அங்கே தன்னுடைய இழிவான அந்தகாரத்தில் உள்ள பாவியும் உறைந்த மழையைப் போல வெண்மையாக்கப்படுகிறான். இரத்தாம்பர பாவக் கறைகள் கழுவப்பட்டிருக்கின்றன. நாங்கள் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாய் இருக்கிறோம். இதற்காக நாங்கள் உமக்கு எப்படியாய் நன்றி செலுத்துகிறோம். இப்பொழுதோ ஞானஸ்நான ஆராதனை வருகிறது. இன்றிரவு இந்த வாலிபப் பெண்மணி தன்னுடைய கர்த்தரின் நாமத்தில் இங்கே ஞானஸ்நானம் பண்ணப்படவிருக்கிறாள் என்று நான் அறிந்துகொள்கிறேன். 195 ஓ பரலோகப் பிதாவே, நீர் இந்த வாலிப ஸ்திரீயை ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம். சில தினங்களுக்கு முன்னால் ஹென்றிவில்லுக்கு வந்து, விதியில் அங்கே சுற்றி சுற்றி நடந்துகொண்டிருந்த அந்த அருமையான குட்டிப் பெண்ணைப் பார்த்த நினைவிற்கே என்னுடைய சிந்தனையானது எப்படி திரும்பிச் செல்கிறது. இன்றிரவோ அவள் ஒரு தாயாய், ஒரு பெண்மணியாய் இருக்கிறாள். அவள் உம்மை அவளுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாள். ஓ, தேவனாகிய கர்த்தாவே, அந்தக் குழந்தைக்கான ஜீவனோ கடினமானதாக இருந்து வந்தது. ஆனால் பரலோகமோ அவளுக்கு நிச்சயமானதாக உள்ளது. நாங்கள் அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனே, நீர் இப்பொழுது இந்த வாலிப ஸ்திரீயை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவள் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வரும்போது, நீர் அவளை தேவனுடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும். கர்த்தாவே, இதை அருளும். பரலோகத்திலே அவளுடைய ஆத்துமா அவ்வளவாய் சிலிர்ப்பூட்டப்படுவதாக! உம்முடைய மகிமைக்காக இதை அருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] 196 கிறிஸ்துவ சபையில் முதல் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்ட பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு பேசின அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்திலிருந்து நான் வாசிக்க விரும்புகிறேன். பேதுரு பரிசேயர்களையும், குருடான ஜனங்களையும் தேவனுடைய குமாரனை அடையாளங்கண்டு கொள்ளாததற்காக கடிந்துகொள்கிறார். எப்படி தேவன் அவரை எழுப்பி, அவருடைய கிரியைகளை மகத்தான அடையாளங்களிலும், அதிசயங்களிலும் நிரூபித்தார் என்பதையும் குறித்துக் பேசுகிறார். அவர் பேசின இந்த காரியத்திற்கு செவிகொடுங்கள். அவர் இயேசுவை உயர்த்தி பேசிகொண்டிருந்தார். 197 ஒவ்வொரு கிறிஸ்துவனுடைய ஆவியும் இயேசுவை உயர்த்துகிறது, உங்களுடைய உதடுகளினால் மாத்திரமல்ல, ஆனால் உங்களுடைய ஜீவியத்தின் மூலம் உயர்த்துதலாகும். உங்களுடைய உதடுகள் ஒரு காரியத்தைக் கூற முடியும், உங்களுடைய ஜீவியம் மற்றொன்றைச் செய்யும். நீங்கள் அவ்வாறு செயல்பட்டால், அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது மாய்மாலமாகும். நான் ஒரு மாய்மாலக்காரனாக பரலோகத்தை சந்திப்பதைக் காட்டிலும் ஒரு நாத்திகனாக சந்திப்பதையே விரும்புகிறேன். ஒரு மாய்மலக்காரனாய் பரலோகத்தை சந்திப்பதைக் காட்டிலும் ஒரு நாத்திகனாய் சந்திக்கும்படியான என்னுடைய தெரிந்து கொள்ளுதலைத் தெரிந்தெடுப்பதே மேலானது என்று நான் நம்புகிறேன். நிச்சயமாகவே…நீங்கள் இயேசுவிற்காக சாட்சி பகர்ந்து, “அவரே இரட்சகர்” என்று கூறுவீர்களேயானால், நீங்கள் அந்தவிதமாகவே ஜீவிக்க வேண்டும், ஏனென்றால் ஜனங்கள் அதை உங்களிடத்திலிருந்து எதிர்பார்க்கப்போகிறார்கள். அது உண்மை. நீங்கள் ஒரு கிறிஸ்தவனைப் போல ஜீவிக்க வேண்டும். நாம் இந்தக் காலையில் அதனூடாக சென்றோம். 198 இப்பொழுது, கர்த்தருக்கு சித்தமானால், நாளை இரவு, இல்லை…புதன் கிழமை இரவு, நாம் இந்த 3-ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவிருக்கிறோம், அது ஒரு ஆச்சரியமான அதிகாரமாய் உள்ளது. இப்பொழுது புதன் கிழமை இரவு வர நிச்சயமாகவே முயற்ச்சி செய்யுங்கள். இந்த ஞாயிறு வேதபாட பள்ளியின் போதனையைக் குறித்த இந்த எபிரேய புத்தகத்தின் காரியங்களை எத்தனை பேர் கேட்டு மகிழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்று கூறுகின்றனர்.—ஆசி.] ஓ, உங்களுக்கு மிக்க நன்றி. அது அருமையாயுள்ளது. 199 இப்பொழுது, அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் 32-ம் வசனந் துவங்கி நான் வாசிக்க விரும்புகிறேன். இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். (அவர்கள் அதை அறிந்திருந்தனர்.) அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். 200 இப்பொழுது தூதர்களில் ஒருவனாகிய தாவீதைக் குறித்து அவன் பேசுகிறதைக் கவனியுங்கள். தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும், நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். அப்பொழுது தாவீது எழுந்து போக முடியவில்லை. அவன் சிந்தப்பட்ட கிடாரி, வெள்ளாடு, செம்மறியாட்டின் இரத்தத்தின் கீழ் இருந்தான். ஆனால் இப்பொழுது அவனால் எழும்ப முடிந்தது, ஏனென்றால் அவன் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் கீழ் இருந்தான். ஏனென்றால், அதற்கான கட்டாயம் உண்டானபோது, அப்பொழுது மாத்திரமே அவர்கள் அந்த இரத்தத்திற்கு பதில் அளித்தனர். கிறிஸ்துவின் இரத்தம் கட்டாயத்திற்குள்ளானபோது, உறுதிப்படுதுதல் உண்டானபோது, நற்சாட்சி பெற்று மரித்திருந்த எல்லோருமே எழுந்து மகிமைக்குள்ளாக ஏறிச் சென்றனர். 201 இப்பொழுது கவனியுங்கள் …ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய்… (இதைக் கவனியுங்கள்) அறியக்கடவர்கள் என்றான். அதைக் குறித்து என்ன? அவர் திரித்துவத்தில் ஒரு நபராய் இருக்கிறாரா அல்லது அவர் முழு திரித்துவமாயிருக்கிறாரா? அவர் சரீரப்பிரகாரமாக முழு தேவத்துவத்தின் பரிபூரணமாயிருந்தார். 202 பிதாவாகியதேவன், குமாரனாகிய தேவன், பரிசுத்த ஆவியாகிய தேவன் என்று மூன்று தேவர்கள் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. அது வேதத்திலும் கூட எங்குமே அப்படிக் கிடையாது. அது எங்குமே அப்படிக் கிடையாது. எங்குமே, “பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” ஞானஸ்நானம் பண்ணப்படும்படி நமக்கு எப்போதுமே கட்டளையிடப்படவேயில்லை. வேதாகமத்தில் எங்குமே அவ்வாறு கிடையாது. அது ஒரு கத்தோலிக்க பிரமாணம், அது பிராட்டெஸ்டென்ட் சபைக்கானதல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலேயன்றி வேறெந்த விதத்திலாவது எந்த ஒரு நபராவது எங்காவது எப்போதாவது ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் என்ற ஒரு வேத வசனத்தை எவரேனும் எனக்கு எடுத்துக் காட்டும்படிக்கு நான் கேட்கிறேன். வந்து அதை என்னிடத்தில் காட்டிவிட்டால், அப்பொழுது நான் என்னுடைய முதுகில், “ஒரு மாய்மாலக்காரன், ஒரு கள்ளத் தீர்க்கதரிசி, ஒரு கள்ளப் போதகன்” என்று எழுதின ஒரு அடையாளத்தை தொங்கவிட்டுக் கொண்டு, வீதிகளினூடாக செல்வேன். அப்படிப்பட்ட ஒரு காரியமேக் கிடையாது. அந்தவிதமாக எந்த நபரும் ஒருபோதும் ஞானஸ்நானம் பண்ணப்படவேயில்லை. அது ஒரு கத்தோலிக்க கோட்பாடேயன்றி ஒரு பிராட்டெஸ்டெண்ட் உபதேசம் அல்ல. 203 நீங்களோ, “மத்தேயு 28:19-ல்” “இயேசு, ‘ஆகையால் நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து’ என்று கூறினாரே” என்று கூறலாம். அது சரிதான். ஆனால் “பிதாவின் நாமத்தில், குமாரனின் நாமத்தில், பரிசுத்த ஆவியின் நாமத்தில்” என்றல்ல. பிதாவின் நாமம்,(நாமங்களில் அல்ல), பிதாவின்… பிதா என்பது ஒரு நாமம் அல்ல. எத்தனை பேர் அதை அறிவீர்கள்? இங்கே எத்தனை தகப்பன்மார்கள் இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எத்தனை குமாரர்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். எத்தனை மானிடர்கள் இங்கே இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். சரி. இப்பொழுது உங்களுடைய பெயர் என்ன? தகப்பன் என்பதோ, குமாரன் என்பதோ அல்ல, மானிடன் என்பதும் அல்ல. 204 ஒரு சமயம் தீவிரமான திரித்துவ கொள்கையிலிருந்த ஒரு ஸ்திரீ என்னிடத்தில், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமமாய் உள்ளதே” என்று கூறினாள். 205 அப்பொழுது நான், “பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமமல்ல. பரிசுத்த ஆவி என்பது அது என்னவாயுள்ளது என்பதாகும். அது பரிசுத்த ஆவியாயிருக்கிறது.” என்றேன். ஒரு நாமம் என்றில்லாமல், அந்தவிதமாகத்தான் அது உள்ளது. நான் ஒரு மானிடன், ஆனால் என்னுடைய பெயர் மானிடன் அல்ல. என்னுடைய பெயர் வில்லியம் பிரான்ஹாம் என்பதாகும். ஆகையால் அவர், “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து,” என்று கூறியிருப்பாரேயானால், 206 அதன்பின்னர் பேதுரு பத்து நாட்கள் கழித்து, “மனந்திரும்புங்கள்” என்றான். இப்பொழுது இங்கே இதைக் கவனியுங்கள். …இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து; சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். …பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவீர்கள். 207 அப்படியானால் இயேசு பேதுருவை செய்யக் கூடாது என்று கூறினதையா அவன் செய்தான்? அவன் குழப்பமடைந்திருக்கவில்லையே. நாம் தான் குழப்பமடைந்துள்ளோம். 208 அப்போஸ்தலர்கள் 2:38-ன் பேரில் யூதர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தண்ணீரில் முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். அப்போஸ்தலர் 8-வது அதிகாரத்தில், பிலிப்பு சமாரியர்களிடத்திற்குச் சென்று பிரசங்கித்தபோது, சமாரியர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர் என்பதை நாம் கண்டறிகிறோம். அப்போஸ்தலர் 10:49-ல் பேதுரு புறஜாதிகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி கட்டளையிட்டான். 209 பவுல், அப்போஸ்தலர் 10:5-ல், “அவன் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான். அங்கே அவன் சில சீஷர்களைக் கண்டான்.” அவர்கள் பாப்டிஸ்டு சீஷர்களாயிருந்தனர். ஒவ்வொருவரும் பாப்டிஸ்டுகளாயிருந்தனர். அவர்கள் அப்பொல்லோ என்னும் பெயர் கொண்ட ஒரு பாப்டுஸ்டு பிரசங்கியாரின் கீழ் மனமாற்றமடைந்திருந்தனர், பாருங்கள். அவன் ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாராயிருந்து, “இயேசுவே கிறிஸ்து என்று வேதத்தைக் கொண்டு நிரூபித்துக் கொண்டிருந்தான்.” அப்பொழுது பவுல், “நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். 210 அதற்கு அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றார்கள். 211 அப்பொழுது அவன், “அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்” என்றான். 212 அதற்கு அவர்கள், “இயேசுவுக்கு ஞானஸ்நானங்கொடுத்த அதே மனிதனால், அங்கிருந்த அதே தண்ணீரில் நாங்கள் ஞானஸ்நானம் பெற்றோம். அது போதுமானதாயிருக்கிறது” என்றனர். 213 பவுல், “அது இப்பொழுது கிரியை செய்யாது. நீங்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்றான். அப்பொழுது பவுல் அவர்கள் மீண்டும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான். பின்னர் தன்னுடைய கரங்களை அவர்கள் மேல் வைத்தபோது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தார். சரி. ஆம் ஐயா. சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டடைவாய்; தண்ணீரின் பாதையில்தான் இன்றைக்கு வெளிச்சம் உண்டு, விலையேறப் பெற்ற இயேசுவின் நாமத்தில் அடக்கம்பண்ணப்படுங்கள். வாலிபரே, வயோதிகரே, உங்களுடைய எல்லா பாவங்களிலிருந்தும் மனந்திரும்புங்கள்; பரிசுத்த ஆவி நிச்சயமாகவே உள்ளே பிரவேசிப்பார்; சாயங்கால் வெளிச்சம் தோன்றியுள்ளது, தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது உண்மையே. 214 அதைத்தான் வேதம் கூறியுள்ளது. அது உண்மை. இதுவே அந்த வேளையாய் உள்ளது. இதுவே நாம் மனந்திரும்ப வேண்டிய ஒரு நேரமாயுள்ளது. 215 நீங்கள் ஞானஸ்நான தொட்டியண்டை ஆயத்தமாயிருக்கும்போது, சத்தமாய்ச் சொல்லுங்கள். நாங்கள்…[ஒரு சகோதரன், “நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம்” என்கிறார்—ஆசி.] நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? சரி, திரையை இழுத்துவிடுங்கள். 216 இப்பொழுது சகோதரன் ஞானஸ்நானம் கொடுக்கும்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் எல்லோராலும் இங்கே காண முடிகிறதா?[சகோதரன் ஆர்மன் நெவில் விசுவாசிகளுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறார்—ஆசி.]